ADDED : ஜன 01, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே கடலில் மீன் பிடிக்கும்போது, படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவர் உடல் நேற்று கரையொதுங்கியது.
பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கல்யாண்குமார் என்பவரது படகில், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், 50; ஜெயசீலன், 42; ஆகியோர் கடந்த 29ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர். கடலில் 1 கி.மீட்டர் துாரத்தில் திடீரென வீசிய காற்றில் படகு கவிழ்ந்தது. இதில், ஜெயசீலன் கடலில் மூழ்கி மாயமானார். கல்யாணகுமார், சக்திவேல் நீந்தி திரும்பினர்.
மாயமான ஜெயசீலனை கடந்த மூன்று நாட்களாக தேடி வந்த நிலையில் நேற்று புதுக்குப்பம் கடற்கரையோரம் ஜெயசீலன் உடல் கரை ஒதுங்கியது.
பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.