ADDED : ஏப் 23, 2025 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் மாநகரில் உள்ள சாலையோரங்களில் பேனர்களோ, போஸ்டர்களோ அரசு உத்தரவின்றி ஒட்ட கூடாது என்கிற உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்த உத்தரவு காற்றிலே பறக்க விட்டு விட்டு சென்டர் மீடியனில் ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள், எதிர்கட்சிகள் மட்டும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
வேறு சங்கங்களோ, கட்சியினரோ சென்டர் மீடியனில் ஒட்டுவதை தவிர்த்து வருகின்றனர்.
தமிழக அரசு நிறைவேற்றும் சட்டத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டிய ஆளுங்கட்சியே அரசு உத்தரவை மீறி போஸ்டர்கள் ஒட்டி மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது வேடிக்கையாக உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அவ்வப்போது, போஸ்டர்களை பீய்த்து எரிவதும், வெள்ளையடிப்பதுமாக உள்ளனர்.

