ADDED : மே 07, 2026 04:31 AM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாவட்ட பாரதிதாசன் இலக்கியமன்றத்தின் சார்பில் உலக புத்தக வாசிப்பு தினம், பாரதிதாசன் பிறந்த நாள் மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி கடலுாரில் நடந்தது. மன்றத் தலைவர் கடல் நாகராஜன் தலைமை தாங்கினார்.
துர்கா கல்லுாரி முதல்வர் செந்தில்முருகன், சிதம்பரம் வாசிப்போர் இயக்கத்தலைவர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தனர்.
மன்ற செயலர் கலைச்செல்வி வரவேற்றார். கவிஞர்கள் இளங்கோவன், சிங்காரம் வாழ்த்தி பேசினர்.
கலந்து கொண்டவர்களுக்கு கடலுார் விஜயகுமார் பரிசுகளை வழங்கி, புத்தக வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். பாஸ்கரன் நன்றி கூறினார்.
