ADDED : ஏப் 18, 2026 04:08 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மர்மமான முறையில் வைக்கோல், வேர்க்கடலை போர்கள் எரிந்து நாசமாகின.
விருத்தாசலம் அடுத்த புலியூரை சேர்ந்தவர் மணிவாசகம். விவசாயி. இவரது விளைநிலத்திற்கு அருகே கால்நடைகளின் தீவனத்திற்காக வைக்கோல் மற்றும் வேர்க்கடலை போர்களை குவித்து வைத்திருந்தார். நேற்று அதிகாலை சென்று பார்த்தபோது, மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது தெரிந்தது.
தகவலறிந்த ஆலடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
