/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமிக்கு சிகிச்சை அளிக்காததால் சுகாதார நிலையம் முற்றுகை
/
சிறுமிக்கு சிகிச்சை அளிக்காததால் சுகாதார நிலையம் முற்றுகை
சிறுமிக்கு சிகிச்சை அளிக்காததால் சுகாதார நிலையம் முற்றுகை
சிறுமிக்கு சிகிச்சை அளிக்காததால் சுகாதார நிலையம் முற்றுகை
ADDED : நவ 07, 2024 06:24 AM

பெண்ணாடம்; பெண்ணாடத்தில் நாய் கடித்த 2 வயது குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால், உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் பேரூராட்சி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் இளையசூரியன். இவரது மகள் சுகி, 2. இளையசூரியன் சாலை விபத்தில் இறந்து விட்டார்.
தாய் கீர்த்தனா குழந்தையை வளர்க்கிறார். சுகியின் பிறந்த நாளான நேற்று மாலை 6:00 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நாய் ஒன்று, சுகியை கடித்தது. குழந்தையின் சத்தம் கேட்டு, அருகிலுள்ளவர்கள் ஓடிவந்து மீட்டு, பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த செவிலியர் நாய் கடிக்கு மருந்து இல்லை எனவும், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என கூறியதாக தெரிகிறது. கீர்த்தனா குழந்தையை தூக்கிக் கொண்டு விருத்தாசலம் புறப்பட்டார்.
இதையறிந்த உறவினர்கள் மருத்துவம் பார்க்காமல் எப்படி விருத்தாசலத்திற்கு அனுப்புவீர்கள் என செவிலியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர், குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக செவிலியர் ஒப்புக்கொண்டார். அதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.