ADDED : ஜன 08, 2025 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை கடற்கரையில் பெண் விட்டுசென்ற மொபைல் போனை ஊர்க்காவல் படை வீரர் ஒப்படைத்தார்.
பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டை கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவர். அந்த வகையில், கடந்த ஞாயிறன்று கூட்டம் அதிமாக இருந்தது. பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரர் தேவநாதன், பணி முடிந்து வீட்டிற்கு செல்ல தனது பைக்கை எடுக்க சென்றுள்ளார். அப்போது, அவரது பைக் கவரில் விலை உயர்ந்த மொபைல்போன் ஒன்று இருந்தது. யாரோ மறந்து போனை வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது.
அதையடுத்து, போனில் இருந்த டையல் நெம்பருக்கு போன் செய்தார். அப்போது அந்த போன் சிதம்பரம் அடுத்த வல்லம்படுகையை சேர்ந்த லதா என்பது தெரியவந்தது. அவரை வரவழைத்து போனை தேவநாதன் ஒப்படைத்தார். அவரது நேர்மையை பொதுமக்கள் பாராட்டினர்.