ADDED : ஜன 02, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் முதுநகர் அடுத்த செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி ராணி,65. நேற்று மாலை 5மணிக்கு இவரது கூரைவீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதில் வீட்டில் இருந்த துணி மற்றும் பொருட்கள் முற்றிலுமாக எரிந்தது. தகவலறிந்த கடலுார் மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று தீயை அனைத்து, மேலும் பரவாமல் தடுத்தனர்.

