/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வயலில் வீசப்பட்ட சுவாமி சிலை; வேப்பூர் அருகே பரபரப்பு
/
வயலில் வீசப்பட்ட சுவாமி சிலை; வேப்பூர் அருகே பரபரப்பு
வயலில் வீசப்பட்ட சுவாமி சிலை; வேப்பூர் அருகே பரபரப்பு
வயலில் வீசப்பட்ட சுவாமி சிலை; வேப்பூர் அருகே பரபரப்பு
ADDED : நவ 13, 2024 08:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர் : வேப்பூர் அருகே தனி நபர் இடத்தில் முருகன் சுவாமி கற்சிலை வீசப்பட்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிலத்தில் முருகன் சுவாமி கற்சிலை கிடப்பதாக, நேற்று முன்தினம் இரவு வேப்பூர் வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வேப்பூர் வருவாய் ஆய்வாளர் ராஜவேல் மற்றும் போலீசார் வந்து பார்த்த போது, அங்கு 4 அடி உயர முருகன் சுவாமி கற்சிலை மஞ்சள் மற்றும் குங்குமம் பூசிய நிலையில் கிடந்தது. சிலையை மீட்டு தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். சிலையை வீசியவர்கள் குறித்து வேப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.