/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வட்டார வேளாண் அலுவலகத்தில் தரவு சேகரிப்பு பணிகள் ஆய்வு
/
வட்டார வேளாண் அலுவலகத்தில் தரவு சேகரிப்பு பணிகள் ஆய்வு
வட்டார வேளாண் அலுவலகத்தில் தரவு சேகரிப்பு பணிகள் ஆய்வு
வட்டார வேளாண் அலுவலகத்தில் தரவு சேகரிப்பு பணிகள் ஆய்வு
ADDED : பிப் 09, 2025 06:30 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த சி.சாத்தமங்கலம், வட்டார வேளாண் அலுவலகத்தில் விவசாயிகள் தரவு உருவாக்கும் பணி ஆய்வு நடந்தது.
வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணிகள் வேளாண்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த திட்டத்தின் முதல்கட்டமாக விவசாயிகள் தரவு சேகரிக்கும் பணியினை மேற்கொள்வதற்கு வேளாண் துறையில் உள்ள அனைத்து அலுவலர்கள் மற்றும் மகளிர் திட்டத்தில் பணியாற்றக்கூடிய கிராம அளவிலான சமுதாய வளபயிற்றுனர்களை ஒருங்கிணைத்து பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
திட்டத்தில் மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு என தனித்துவமான குறியீடு எண் வழங்கப்பட உள்ளது.
நேற்று சி.சாத்தமங்கலம் கீரப்பாளையம் வட்டார வேளாண் அலுவலகத்தில் நடந்த முகாமினை வேளாண் உதவி இயக்குனர் அமிர்தராஜ் ஆய்வு செய்தார். பதிவு செய்யும் விவசாயிகள் தாங்கள் இதுவரை அரசாங்கத்திடம் பெற்ற சலுகைகள், மானியங்கள் மற்றும் பிரதமர் மோடியின் விவசாயிகள் காக்கும் திட்டத்தில் ஒன்றான கவுர நிதி விவரங்களை தெரிந்துகொள்ளும் வசி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆய்வின்போது கீரப்பாளையம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் நில உடமை ஆவணங்கள் போன்றவற்றை தங்களது கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அல்லது ஊராட்சி அலுவலங்களில் நடைபெறும் முகாம்களுக்கு எடுத்து சென்று விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.