ADDED : செப் 21, 2025 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : பா.ஜ., அரசின் ஓட்டு திருட்டை கண்டித்து, காங்., சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
விருத்தா சலம் பாலக்கரையில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நகர தலைவர் ரஞ்சித்குமார் வரவேற்றார். பா.ஜ., அரசின் ஓட்டு திருட்டை கண்டித்து, காங்., கட்சியினர், பொது மக்கள், வியாபாரிகளிடம் ராட்சத பேனரில் கையெழுத்து பெறப்பட்டது.
ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் மணிகண்டன், வட்டார தலைவர்கள் ராவணன், சாந்தகுமார், பீட்டர் சாமிகண்ணு, செல்வ ஆனந்த், மு ருகானந்தம், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தொகுதி தலைவர் செந்தமிழ்செல்வன், மகளிரணி லாவண்யா, நிர்வாகிகள் காமராஜ், ராஜிவ்காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.