/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டில் நுழைந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
/
வீட்டில் நுழைந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
வீட்டில் நுழைந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
வீட்டில் நுழைந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : அக் 19, 2024 04:57 AM
பண்ருட்டி, : பண்ருட்டி அருகே வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த அழகப்பசமுத்திரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி,42; இவரது மனைவி கன்னிகாகுமாரி,37;இவரது குடும்பத்திற்கும், இதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் ராஜசேகரன் என்பவரது குடும்பத்திற்கும் முன்விரோதம் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 12ம்தேதி இரவு 8:30 மணியளவில் ராஜசேகரன் கன்னிகாகுமாரியின் வீட்டில் அத்துமீறி உள்ளே புகுந்தார். அங்கிருந்த கன்னிகாகுமாரியை ஆபாசமாக திட்டி,தாக்கி கத்தியை காட்டி மிரட்டினார்.
கன்னிகாகுமாரியின் புகாரின் பேரில் காம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து ராஜசேகரன்,35; கைது செய்தனர்.