/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரிசிபெரியாங்குப்பத்தில் மலையை காணவில்லை; கடலூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு
/
அரிசிபெரியாங்குப்பத்தில் மலையை காணவில்லை; கடலூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு
அரிசிபெரியாங்குப்பத்தில் மலையை காணவில்லை; கடலூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு
அரிசிபெரியாங்குப்பத்தில் மலையை காணவில்லை; கடலூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு
ADDED : மார் 06, 2024 02:27 AM

கடலுார் : கடலுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தலைவர் பக்கிரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அய்யனார், பி.டி.ஓ., இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது;
முரளி: அரிசிபெரியாங்குப்பம் பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரிசிபெரியாங்குப்பம் பகுதியில் உள்ள குவாரியில் இருந்து சாலை பணிக்கு மண் எடுப்பதாக கூறி தனி நபருக்கு மண் எடுக்கின்றனர். இதனால் அங்குள்ள மலையையே காணவில்லை.
ஞானசவுந்தரிதுரை: பெரிய காரைக்காடு, செம்மாங்குப்பம் பகுதியில் உள்ள இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சேதமடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது. இதன் பிறகு புதிய குடிநீர் தொட்டி கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிப்காட்டில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மதிவாணன்: நத்தப்பட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். திருமலை நகர், திருநகர் பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.
கிரிஜா செந்தில்குமார்: பாதிரிக்குப்பம் பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
அதற்கு ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி, கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது, ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

