நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணாடம் புதிய பஸ் நிலையம், பயணியர் நிழற்குடையில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடப்பதாக பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்து வந்த பெண்ணாடம் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர்.
வி.ஏ.ஓ., கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.