தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கீழணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு:டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

கீழணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு:டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

கீழணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு:டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி


UPDATED : செப் 24, 2026 11:31 PM

ADDED : செப் 24, 2026 09:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 11:31 PM ADDED : செப் 24, 2026 09:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காட்டுமன்னார்கோவில்:கீழணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலார் மாவட்டம் டெல்டா பாசனத்திற்கு ஆதாரமாக உள்ள வீராணம் ஏரி. இந்த ஏரியில் இருந்து தலைநகர் சென்னைக்கும் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'எல்-நினோ' தாக்கம் காரணமாக வீராணம் ஏரியில்நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

சென்னை குடிநீருக்கு முக்கியத்துவம் கொடுத்து வீராணம் ஏரிக்கு கடந்த 12ம் தேதி முதல் கீழணையில் இருந்து வடவாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் திறந்துவிடப்படும் 900 கன அடி தண்ணீரில், கீழணைக்கு 450 முதல் 500 கன அடி தண்ணீர் அளவில் மட்டுமே வரத்து உள்ளது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வடவாற்றில் 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கடந்த 12 நாட்களில் வீராணம் ஏரி 2 அடி தண்ணீர் மட்டுமே உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி வீராணம் ஏரி நீர்மட்டம் 42.37 அடி (403.68 மில்லியன் கன அடி) தண்ணீர் உள்ளது. கீழணை நீர்மட்டம் 4.50 அடியாக இருந்தது.

காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் டெல்டா பகுதியில் விவசாயிகள் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு போக சம்பா சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். டெல்டா பகுதியில் கடந்த 20ம் தேதி பெய்த பரவலான மழையால் நெல் விதைப்பு முளைத்துள்ளது. அதன் பின்னர் மழை இல்லாமல் பொய்த்து போகும் நிலை ஏற்பட்டதால் கவலையடைந்த விவசாயிகள், டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

சென்னை குடிநீருக்கா அல்லது டெல்டா பாசனத்திற்கு முக்கியத்தும் அளிப்பதா என பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். டெல்டா விவசாயிகளிடம் இருந்து பாசனத்திற்கான கோரிக்கை வலுப்பெற்றதால், நேற்று மதியம் முதல் திடீரென டெல்டா பாசனத்திற்கு கீழணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி கல்லணையில் இருந்து கீழணைக்கு கொள்ளிடம் ஆற்றில் 900 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அந்த தண்ணீர் கீழணைக்கு 500 கன அடி அளவில் வரத்து உள்ளது. கீழணை நீர் மட்டம் 4.50 அடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்கு வடக்கு ராஜன்வாய்க்கால் 200 கன அடி, தெற்கு ராஜன் வாய்க்கால் 200 கன அடி, வடவாறு 200 கன அடி, குமுக்கி மன்னியாறு 30 கன அடி வீதம் டெல்டா பாசனத்திற்கு 630 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

டெல்டாவில் முளைப்பு ஏற்பட்டுள்ள நெல் பயிர்கள், கடும் வெயில் தாக்கத்தில் இளம் பயிர்கள் கருகாமல் இருக்க தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, அதிகாரிகள் திடீரென கீழணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us