/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சி அலுவலகத்தால் பள்ளிக்கு தொடரும் சிக்கல்
/
ஊராட்சி அலுவலகத்தால் பள்ளிக்கு தொடரும் சிக்கல்
ADDED : ஜன 23, 2024 11:19 PM

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, ஆலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் அப்பகுதியைச் சுற்றியுள்ள மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க 2022 - 23 ம் ஆண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 190 மீட்டர் சுற்றுச்சுவர் அமைக்க ரூபாய் 19 லட்சத்து 63 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் பள்ளி வளாகத்தில் இருந்த அதே பள்ளியின் பழுதடைந்த கட்டடங்களை இடித்து அகற்றப்பட்டது. இந்நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள ஊராட்சிமன்ற கட்டடம் இடித்து அகற்றப்படாமல் உள்ளது.
இதனால் பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுகிறது. மேலும் தற்போது பள்ளியை ஒட்டி, விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.
பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் இடைவேளை, மதிய உணவு நேரங்களில், பள்ளி வளாகத்தை விட்டு, வெளியில் வரும் மாணவர்கள் வாகன விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே ஆலப்பாக்கம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.

