/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு மருத்துவமனையில் ஏணி திருடியவர் கைது
/
அரசு மருத்துவமனையில் ஏணி திருடியவர் கைது
ADDED : ஜன 13, 2025 03:58 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் ஏணி திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில், 5 கோடி ரூபாயில் ஐந்து அடுக்கு மாடியில் புதிதாக கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த சில்வர் ஏணியை (வேடர் ஏணி) எடுத்துச் சென்றார்.
சிசிடிவி., காட்சிகளின் அடிப்படையில் மேலக்கோட்டை வீதியில் சென்ற நபரை பிடித்து விசாரித்ததில், வேப்பூர் தாலுகா, வலசை கிராமத்தை சேர்ந்த காசிபிள்ளை மகன் தன்ராஜ், 28, என்பதும், ஏணியை திருடிச் சென்றதும் தெரிய வந்தது. இது குறித்து முதன்மை குடிமையியல் மருத்துவர் (பொறுப்பு) பாலமுருகன் புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப் பதிந்து, தன்ராஜை கைது செய்தனர்.