/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொலைதுார கல்வி மாணவர்கள் காத்துக் கிடக்கும் அவலம்
/
தொலைதுார கல்வி மாணவர்கள் காத்துக் கிடக்கும் அவலம்
ADDED : ஜூலை 19, 2025 01:14 AM
கடலுார் : தொலைதுார கல்வியில் பணியாற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் மாணவ, மாணவியர்கள் அவதிப்படும் நிலை உள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடந்த 1929ம் ஆண்டு நிறுவப்பட்டது. இப்பல்லைக்கழகம் 'நாக்' கில் 2014ல் 'ஏ' தரத்துடன் அங்கீகரிக்கப்பட்டது. இது தொலைதுாரக் கற்றல் திட்டங்களையும் வழங்குகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதுாரப் படிப்புகளில் ஏராளமான படிப்புகள் இருந்தாலும் 28 வகை படிப்புகளில் அதிகளவு மாணவர்கள் சேர்ந்து படிக்கின்றனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தேர்வு கட்டுப்பாட்டு துறையின் கீழ் இயங்கும், குறை தீர்ப்பு மையத்திற்கு தினமும் வெளியூர்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் வருகின்றனர்.
குறை தீர்க்கும் மையத்தில் அலுவலக நேரத்தில் ஊழியர்கள் முழுமையாக பணியாற்றாமல் போவதால் மாணவர்கள் காத்து கிடக்கும் அவலம் நிலை உள்ளது. குறிப்பாக, மாணவர்களின் சான்றிதழ்களில் தவறாக அச்சடிப்பது.
அதை திருத்துவதற்கு மாணவர்களிடமே கட்டணம் வசூலிப்பது. முகவரி மாற்றி சான்றிதழ்களை அனுப்பி மாணவர்களை அலைகழிப்பது. மாணவர்கள் வெளியூர்களில் இருந்து செலவு செய்து வந்து கேட்கும் போது கல்வி கட்டணத்தில் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் நிலுவைத் தொகைக்காக சான்றிதழ் அனுப்பவில்லை என்று சொல்வது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது.
நிலுவை தொகை உள்ளதால் சான்றிதழ் அனுப்பவில்லை என, தபால், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவித்திருக்கலாம். இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் காலம், பணம் விரயம் செய்து சான்றிழ் பெற வேண்டியுள்ளது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.