/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வன்னியர் சங்க கொடிக்கம்பத்தை போலீஸ் அகற்ற முயன்றதால் பரபரப்பு
/
வன்னியர் சங்க கொடிக்கம்பத்தை போலீஸ் அகற்ற முயன்றதால் பரபரப்பு
வன்னியர் சங்க கொடிக்கம்பத்தை போலீஸ் அகற்ற முயன்றதால் பரபரப்பு
வன்னியர் சங்க கொடிக்கம்பத்தை போலீஸ் அகற்ற முயன்றதால் பரபரப்பு
ADDED : செப் 23, 2024 06:29 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே வன்னியர் சங்க கொடிக்கம்பத்தை போலீசார் அகற்ற முயன்றதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த துறையூர் பஸ் நிறுத்தத்தில், சென்டர் மீடியனில், கடந்த 5 மாதங்களுக்கு முன் பா.ம.க., சார்பில் வன்னியர் சங்க கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது.
இந்த கொடிக்கம்பம், அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி, நேற்று காலை 9:00 மணியளவில் பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் அகற்ற முயன்றனர்.
இதையறிந்து அங்கு திரண்ட பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க பிரமுகர்கள், கொடிகம்பம் அகற்றுவதை தடுத்து நிறுத்தி, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார், கொடி கம்பத்தை அகற்றுவதை கைவிட்டு, வருவாய் துறை மூலம் நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர்.
இச்சம்பவத்தினால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.