/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உண்டியலை மீட்க போலீசார் அலட்சியம்
/
உண்டியலை மீட்க போலீசார் அலட்சியம்
ADDED : ஜன 31, 2024 02:22 AM

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் சப் டிவிஷனுக்குட்பட்ட போலீஸ் நிலைய எல்லையில் பிடாரி செல்லியம்மன் கோவிலில் கடந்த 30 நாட்களுக்கு முன் அவ்வழியே சென்ற கிராம மக்கள் கோவில் பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
வந்து பார்த்தபோது, 3 அடி உயர உண்டியலை மர்மநபர் திருடிச்சென்றது தெரிந்தது. கிராம மக்கள் போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
உண்டியலை கிராம மக்கள் தேடியபோது காணிக்கை இல்லாமல் அதே பகுதியில் உள்ள ஏரியில் கிடந்தது.
இதனை பார்த்த மக்கள் மீண்டும் போலீசில் தெரிவித்தனர்.
ஆனால் போலீசாரோ நீங்களே உண்டியலை எடுத்துக்கொள்ளுங்கள் என கூலாக தெரிவித்தனர்.
கிராம மக்களோ உண்டியலை மீட்க அச்சப்பட்டு இதுவரை ஏரியிலேயே கிடக்கிறது.