/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுமதி அளித்தும் ரேஷன் கடை திறக்காத அவலம் நீடிப்பு
/
அனுமதி அளித்தும் ரேஷன் கடை திறக்காத அவலம் நீடிப்பு
அனுமதி அளித்தும் ரேஷன் கடை திறக்காத அவலம் நீடிப்பு
அனுமதி அளித்தும் ரேஷன் கடை திறக்காத அவலம் நீடிப்பு
ADDED : செப் 14, 2025 02:31 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் ரேஷன் கடை திறக்க அனுமதித்தும் கட்டடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் கடையை திறக்க முடியாத நிலை உள்ளது.
நெல்லிக்குப்பம் நகராட்சி 2வது வார்டு சோழவல்லியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு தனியாக ரேஷன் கடை இல்லை. ஒரு கி.மீ., துாரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றே பொருட்கள் வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
சோழவல்லியில் தனியாக ரேஷன் கடை அமைக்க 25 ஆண்டுக்கு முன் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், அங்கு ரேஷன் கடை திறக்க அனுமதி அளிக்கவில்லை. இதனால் பயன்பாடு இல்லாமல் இருந்த கட்டடத்தை சிலர் ஆக்கிரமித்தனர்.
இந்நிலையில் தி.மு.க., கவுன்சிலர் இலக்கியா முயற்சியால், ரேஷன் கடை திறக்க அனுமதி கிடைத்தது.
ஆனால் கட்டடம் ஆக்கிரமிப்பில் உள்ளதால் கடையை திறக்க முடியாத நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி ரேஷன் கடையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.