ADDED : ஜன 05, 2026 04:01 AM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் கட்டுமான பணி முடிந்தும் சமுதாய கழிவறை திறக்கப் படாமல் வீணாகிறது.
நெல்லிக்குப்பம் நகராட்சி 7வது வார்டு அண்ணா நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள். இவர்கள் பயன்பாட்டுக்காக துாய்மை இந்தியா திட்டத்தில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாய கழிவறை கட்ட டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் கட்டுமான பணியை முடித்து பல மாதங்கள் ஆகிறது.
ஆனாலும், கழிவறை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால், கழிவறை வளாகம் புதர்மண்டி காணப்படுகிறது. அரசின் நிதி வீணாகிறது.
எனவே, சமுதாய கழிவறையை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
