/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாட்டாளி தொழிற் சங்கத்தினர் உண்ணாவிரதம்
/
பாட்டாளி தொழிற் சங்கத்தினர் உண்ணாவிரதம்
ADDED : செப் 29, 2024 06:33 AM

நெய்வேலி : ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வலியுறுத்தி, நெய்வேலியில் என்.எல்.சி., பாட்டாளி தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்.எல்.சி., ஒப்பந்தம் மற்றும் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உடனடியாக 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பட்டாளி தொழிற்சங்கத்தினர் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்.எல்.சி., பாட்டாளி தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் செல்வராசு தலைமை தாங்கினார். தலைவர் குமாரசாமி, பொருளாளர் ஆறுமுகம், அலுவலக செயலாளர் முருகவேல் முன்னிலை வகித்தனர். என்.எல்.சி., ஒப்பந்த பா.தொ.ச.,தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். பா.ம.க., மாவட்ட செயலாளர் ஜெகன் துவக்கி வைத்தார்.
பா.ம.க. எம்.எல்.ஏ., மயிலம் சிவக்குமார் கோரிக்கைகள் குறித்து பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் கோவிந்தசாமி போராட்டத்தை முடித்து வைத்தார்.
பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநில பேரவை செயலாளர் முத்துக்குமார், தலைவர் வீரமணி, பொருளாளர் சேகர் உள்ளிட்ட பா.ம.க., நிர்வாகிகள் பேசினர். செயலாளர் ஜோதிமணி நன்றி கூறினார்.