/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணையாற்று கரையால் வயலில் தேங்கும் மழைநீர் தண்ணீர் வடிய வழியில்லாமல் நெற்பயிர் அழுகும் அவலம்

ADDED : அக் 21, 2024 06:35 AM

கடலுார்: கடலுார் அருகே பெரியகங்கணாங்குப்பத்தில் போடப்பட்ட பெண்ணையாற்று கரையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளது.
கடலுார் தென் பெண்ணையாற்று பாலத்தின் வடக்கு கரை பக்கம் உள்ளது பெரிய கங்கணாங்குப்பம் கிராமம். இக் கிராமத்தின் சுற்றிலுமுள்ள நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பெண்ணையாற்றின் வடக்கு கரையோரம் 5.90 கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளத் தடுப்பணை போடப்பட்டுள்ளது. இந்த அணை கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தரைப்பாலத்தில் இருந்து சுபா
உப்பலவாடி கிராமம் வரை போடப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கிராமப்பகுதியில் இருந்து தேங்கும் மழைநீர் வடிய கதவணை போடப்பட்டுள்ளது. அதேப்போல பெண்ணையாற்று பாலத்தின் வடமேற்கு பகுதியில் தேங்கும் மழைநீர் வடிய வைக்க பெண்ணையாற்று பாலம் அருகே கதவணை போடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு பாலம் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தேங்கும் தண்ணீர் வடிவதற்கு ஏற்ற இடமாக இல்லை. கொம்மன்தான்மேடு கிராமத்திற்கும், பெரிய கங்கணாங்குப்பத்திற்கும் இடையில் உள்ள நிலப்பரப்பில் தற்போது நெல் பயிரிடப்பட்டுள்ளது.
அண்மையில் பெய்த சாதாரண மழைக்கே முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் கடலுார் எம்.எல்.ஏ., ஐயப்பனை சந்தித்து புகார் தெரிவித்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி ஆவண செய்வதாக கூறியுள்ளார். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இப்பிரச்னை மீது கவனம் செலுத்தி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை நடவடிக்கை எடுக்க வேண்டும்.