/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி கண்டரக்கோட்டையில் ஆற்று திருவிழா நாளை நடக்கிறது
/
பண்ருட்டி கண்டரக்கோட்டையில் ஆற்று திருவிழா நாளை நடக்கிறது
பண்ருட்டி கண்டரக்கோட்டையில் ஆற்று திருவிழா நாளை நடக்கிறது
பண்ருட்டி கண்டரக்கோட்டையில் ஆற்று திருவிழா நாளை நடக்கிறது
ADDED : ஜன 17, 2025 06:19 AM

பண்ருட்டி: பண்ருட்டி கெடிலம் மற்றும் கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றில் நாளை ஆற்று திருவிழா நடக்கிறது.
பண்ருட்டி கெடிலம் மற்றும் கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றில் நாளை (18 ம்தேதி) ஆற்று திருவிழா நடக்கிறது.
விழாவையொட்டி பண்ருட்டி கெடிலம் ஆற்றில் கொட்டப்பட்ட குப்பைகள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டு, சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஆற்றங்கரையில் சிறுவர்கள் விளையாடுவதற்கான ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பண்ருட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தீர்த்தவாரிக்கு வரும் உற்சவர் சுவாமிகள் நிற்பதற்கு பந்தல் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதே போல் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியம், கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றில் பொங்கல் திருவிழா நாளை ( 18 ம்தேதி) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது
விபத்துகள் தடுக்கப்படுமா
கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றில் கடந்த இரு ஆண்டுகளாக ஆற்றின் நடுவில் பெரிய அளவிலான யானைபிடிக்கும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த பகுதியில் நீரோட்டம் உள்ளதால் உள்ளூர் மக்கள் தினந்தோறும் குளித்து வருகின்றனர். திருவிழாவில் ஆயிரக்கனக்கான மக்கள் பங்கேற்கும் போது பள்ளமான பகுதியில் சிறுவர்கள் உள்ளிட்டோர் ஆற்றில் குளிக்க ஆசைப்பட்டு குளித்தால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
ஆனால் விபத்தை தவிர்க்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை சார்பில் எவ்வித தற்காலிக அறிவிப்பு பலகை, தடுப்பு அரண் ஏதும் ஏற்படுத்தவில்லை. விபத்தை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.