/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பனம்பழம் விழுந்த கதையானது டி.எஸ்.பி., டிரான்ஸ்பர்
/
பனம்பழம் விழுந்த கதையானது டி.எஸ்.பி., டிரான்ஸ்பர்
ADDED : அக் 09, 2024 04:30 AM
விருத்தாசலத்தில் காந்தி ஜெயந்தியன்று, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் தொண்டர்கள் நடைபயணமாக வந்தனர். இதற்கு, டி.எஸ்.பி., கிரியாசக்தி அனுமதி மறுத்ததால், எம்.எல்.ஏ.,வுடன் நேருக்கு நேர் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., அன்று மாலையே, 'ஊர்தோறும் கஞ்சா விற்கிறது. அதை தடுக்க வேண்டிய போலீசார், நடைபயணத்தை தடுக்கின்றனர்' என டி.எஸ்.பி.,க்கு எதிராக காட்டமாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கடந்த மாதம் நடந்த மகிளா காங்., இட ஒதுக்கீடு ஊர்வலத்திற்கும் டி.எஸ்.பி., அனுமதி மறுத்தார் எனவும் கூறினார்.
இந்நிலையில், கோவை மாவட்ட கோர்ட் விஜிலன்ஸ் டி.எஸ்.பி.,யாக கிரியா சக்தி பணி மாறுதல் செய்யப்பட்டதால், நேற்று முன்தினம் மாலையே, விருத்தாசலம் முகாம் அலுவலகத்தில் விடைபெற்றார்.
எம்.எல்.ஏ.,வுடன் மோதல் காரணமாக, டி.எஸ்.பி., பொறுப்பேற்ற இரு மாதத்தில் அதிரடியாக மாற்றப்பட்டார் என, பொதுமக்கள் மத்தியில் தகவல் பரவியது. காங்., கட்சியினர் இதை கிளப்பிவிட்டனர். இதை முற்றிலும் மறுத்த போலீஸ் தரப்பு, ' கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.,யாக கிரியா சக்தி இருந்தபோது கோர்ட் விஜிலன்ஸ் பணிக்கு வில்லிங் கொடுத்திருந்தார்.
ஆனால், விருத்தாசலத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆர்டர் வந்து விட்டதால், உடனடியாக பணியில் இருந்து விடுவித்துக் கொண்டார். எம்.எல்.ஏ.,வுடன் நடந்த மோதலுக்கும், மாறுதலுக்கும் தொடர்பு இல்லை' என்றனர்.

