ADDED : மே 08, 2025 01:28 AM
கடலுார்: கடலுார் உழவர்சந்தை பின்புறம் உள்ள சாலையோர வியாபாரிகளின் கோரிக்கை, அடிப்படை தேவைகளை நிறைவேற்றிதரக்கோரி சி.ஐ.டி.யூ., கடலுார் மாவட்ட சாலையோர சிறு கடை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.
சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் கருப்பையன் தலைமை தாங்கினார். கன்வீனர் திருமுருகன், மாவட்ட செயலாளர் சங்கமேஸ்வரன், விற்பனைக்குழு உறுப்பினர் அப்துல் காதர், உழவர் சந்தை சங்க தலைவர் பெருமாள், செயலாளர் முரளி, பொருளாளர் ராதா உட்பட பலர் உடனிருந்தனர். மனுவில், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தின் படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாபாரிகளை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும். கடந்த ஆண்டு கணக்கெடுப்பில் விடுபட்டவர்களையும் சேர்த்து கணக்கெடுக்க வேண்டும். வெயில், மழை காலங்களில் வியாபாரிகள் பாதிப்படையாமல் இருக்க உழவர் சந்தையின் பின்புறம் மாநகராட்சி சார்பில் ஷெட் அமைத்து தர வேண்டும் எனதெரிவிக்கப்பட்டிருந்தது.
