/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இறகு பந்து போட்டி மாணவிகள் அசத்தல்
/
இறகு பந்து போட்டி மாணவிகள் அசத்தல்
ADDED : ஜூலை 31, 2025 03:36 AM

திட்டக்குடி: திட்டக்குடியில் நடந்த பெண்களுக்கான இறகு பந்து போட்டியில் இறையூர் அருணா பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர்.
திட்டக்குடியில் குறுவட்ட அளவில் பெண்களுக்கான இறகு பந்து போட்டி நடந்தது. இதில், குறுவட்டத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் இறையூர் அருணா உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வர்ஷிணி, உதயா ஆகியோர் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் முதலிடம், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவி அணுலேகா 2ம் இடம், 17 வயதுக்குட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவில் மாணவி சங்கீதா 2ம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டினர். உடற்கல்வி இயக்குனர் விஜயகுமார் உடனிருந்தனர்.

