/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிவபாரதி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
சிவபாரதி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : மே 11, 2025 01:48 AM

விருத்தாசலம்: கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் சிவபாரதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதிய 46 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் இப்பள்ளி மூன்றாவது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவி தீபிகா 590 மதிப்பெண் பெற்று விருத்தாசலம் வட்டத்தில் சிறப்பிடம் பிடித்தார். மாணவி ராஜராஜேஸ்வரி 578 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் இரண்டாமிடம், திருநாவுக்கரசு 572 மதிப்பெண் பெற்று 3ம் இடம் பிடித்தார். 25 மாணவர்கள் 500க்கு மேல் மதிப்பெண் பெற்றனர்.
கணினி அறிவியல் பாடத்தில் 5 மாணவர்கள், வேதியியல் பாடத்தில் 2 மாணவர்கள், விலங்கியல் பாடத்தில் ஒரு மாணவர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சிவநேசன் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் ஆனந்தபாஸ்கர் மாணவர்களுக்கு சால்வை அணிவித்தார். ஆசிரியர் இளையராஜா, பள்ளி செயலர் சரண்யா உடனிருந்தனர்.