நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : விருத்தாசலத்தில் தனியார் லாட்ஜில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் வடக்கு கோட்டை வீதியை சேர்ந்தவர் மதன், 40; திருமணமாகாதவர். இவருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் கிடைக்கவில்லை. இதில், விரக்தியடைந்த மதன் மது பழக்கத்திற்கு அடிமையானார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள தனியார் லாட்ஜில் மதன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
விருத்தாசலம் போலீசார் உடலை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

