/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருக்குறள் பேரவை முப்பெரும் விழா
/
திருக்குறள் பேரவை முப்பெரும் விழா
ADDED : ஜூலை 21, 2025 06:44 AM

திட்டக்குடி : திட்டக்குடியில் திருக்குறள் பேரவை சார்பில் விருது வழங்கும் விழா, தலைமை ஆசிரியர்கள் கவுரவிப்பு விழா, மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் என முப்பெரும் விழா நடந்தது.
பேரவை தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் பெரியசாமி, ஞானகுரு பள்ளி நிறுவனர் கோடிப்பிள்ளை முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் பாஸ்கரன், மேத்தாவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், மனவளக்கலை மன்றத்தை 13ம் ஆண்டுகள் சிறப்பாக செயல்படுத்தி வரும் பேரவை செயலாளர் திருநாவுக்கரசுவுக்கு 'மனவளக்கலை நாயகர்' விருது வழங்கப்பட்டது. 2025ல் நடந்த 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்பட்டன.
திட்டக்குடி பகுதியில் 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டன.
பொருளாளர் அன்பானந்தன் நன்றி கூறினார்.