தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முப்பெரும் விழா 

 முப்பெரும் விழா 

 முப்பெரும் விழா 


ADDED : ஜன 14, 2026 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 05:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் முப்பெரும் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பண்ருட்டியில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், ஜாதக பரிவர்த்தனை, மாவட்ட பொதுக்குழு கூட்டம், வேதம் பயிலும் வித்யார்த்திகளின் பெற்றோர் கவுரவித்தல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் நாராயணன் வரவேற்றார்.

மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் அருணாசலம் முன்னிலை வகித்தனர். மாநில கொள்கை பரப்பு செயலர் அனுசுயா ஸ்ரீதர் ஜாதக பரிவர்த்தனை ஒருங்கிணைப்பு செய்து பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில அமைப்பு செயலர் குமார், மாநில செயலாளர்கள் முரளிதரன், குமார், புதுச்சேரி தலைவர் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பிராமணர் சமூகத்தினர் இருபாலருக்கும் ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சி; இன்றைய சூழலில் ஆன்மீகம் வளர்ச்சியடைந்தது பக்தியினாலா, பயத்தினாலா எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம்; ஆகியவை நடந்தன. மாவட்ட பொருளாளர் பிரபாகர்ராவ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us