ADDED : ஆக 29, 2026 08:43 PM
கடலுார்: கடலுாரில், மாநகராட்சி வரி செலுத்துவோர் மற்றும் நுகர்வோர் நலச்சங்க 5ம் ஆண்டு துவக்க விழா, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு, சாதனையாளர்களுக்கு விருது வழங்கல் என, முப்பெரும் விழா நடந்தது. சங்கத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கார்மேகவண்ணன், முகுந்தன், ராஜதுரை, கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர். செயலாளர் பாலசுந்தரம் வரவேற்றார். கவுரவ ஆலோசர் வழக்கறிஞர் அருணாசலம் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.சிறப்பு விருந்தினராக மாநகராட்சி கமிஷனர் கிஷன்குமார் பங்கேற்று, மாவட்ட அளவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வென்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். வழக்கறிஞர்கள் தமிழரசன், சந்திரசேகரன், சபீனா, தனியார் பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் சதீஷ்குமார், ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, லயன்ஸ் சங்க தலைவி உமா சங்கர் வாழ்த்தி பேசினர்.
வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், முன்னாள் ராணுவ வீரர் பாபு ஆகியோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில், தங்கதுரை, கோபிநாத், செல்வம், பக்தவச்சலம், செல்வராஜ், ரவிச்சந்திரன், மணிமாறன் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் தண்டபாணி நன்றி கூறினார்.
