ADDED : செப் 22, 2024 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் உலக திருக்குறள் கூட்டமைப்பு, லயன்ஸ் கிளப் மற்றும் தஞ்சை தமிழ் மன்றம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி தலைமை தாங்கினார். திருக்குறள் கூட்டமைப்பு துணை தலைவர் பழமலை, வட்டார தலைவர் மேழிச்செல்வன் முன்னிலை வகித்தனர்.லயன்ஸ் கிளப் தலைவர் சக்திவேல் வரவேற்றார். பாவலர் மணி நிறைமதி நீலமேகம் எழுதிய 'விருத்தமாயிரம்' நூலை பன்னாட்டு லயன்ஸ் கிளப் கூட்டு மாவட்ட தலைவர் ரத்தினசபாபதி வெளியிட, கவிஞர் கண்மணி குணசேகரன் பெற்று, வாழ்த்தி பேசினார்.
திருத்துளார் முன்னாள் ஊராட்சி தலைவர் கொளஞ்சிநாதன், தா.பழூர் சாமிநாதன், ஆவட்டி பரமசிவம், டாக்டர் விமலா உட்பட பலர் பங்கேற்றனர்.
உலக திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் அருள்முருகன் நன்றி கூறினார்.