/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உயர்மின் கோபுரத்தில் ஏறிய நபர் வீடியோ வைரலால் பரபரப்பு
/
உயர்மின் கோபுரத்தில் ஏறிய நபர் வீடியோ வைரலால் பரபரப்பு
உயர்மின் கோபுரத்தில் ஏறிய நபர் வீடியோ வைரலால் பரபரப்பு
உயர்மின் கோபுரத்தில் ஏறிய நபர் வீடியோ வைரலால் பரபரப்பு
ADDED : ஜன 06, 2024 06:21 AM

நெய்வேலி : நெய்வேலியில் அதிக மின் கடத்தும் திறன் கொண்ட உயர்மின் கோபுரத்தில் ஏறும் மர்ம நபரின் வீடியோ வைரலானதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 28ல் அதிக வோல்டேஜ் மின்சாரம் கடத்தும் திறன் கொண்ட உயர்மின் கோபுரங்கள் உள்ளது.
இதன் வழியாக என்.எல்.சி., அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த மின்கோபுரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஏறும் வீடியோ நேற்று சமூக வலைதளத்தில் வைரலானது.
இதுகுறித்து தெர்மல் போலீசார் விசாரணை நடத்தியதில், பராமரிப்பு பணிக்காக தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி ஏறியது தெரிய வந்தது.