/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் கிராம பொது சேவை மையம்
/
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் கிராம பொது சேவை மையம்
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் கிராம பொது சேவை மையம்
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் கிராம பொது சேவை மையம்
ADDED : ஜூன் 30, 2025 03:09 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் ஊராட்சியில் பல லட்சங்கள் செலவு செய்து கட்டிய அரசு கட்டடங்கள் பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் ஊராட்சியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நீர் பிடிப்பு தாழ்வான பகுதியில் 15 லட்சம் மதிப்பில் கிராம பொது சேவை மையக் கட்டடமும், தானியங்கள் பாதுகாப்பதற்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் குடோன்களும் கட்டப்பட்டன. ஆனால், இதுநாள் வரை கட்டடங்கள் திறப்பு விழா காணாமலேயே உள்ளது.
இதன் காரணமாக கதவுகள், ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன. சிமெண்ட் காரைகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக கட்டப்பட்டதால் கட்டடம் எதற்கும் பயன்பாடு இல்லாமல் உள்ளது.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திறப்பு விழா காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.