/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாரச்சந்தையில் கடைகள் இன்றி வெறிச்சோடியது
/
வாரச்சந்தையில் கடைகள் இன்றி வெறிச்சோடியது
ADDED : ஜன 20, 2025 06:28 AM

நடுவீரப்பட்டு : பாலுார் அருகே உள்ள சன்னியாசிப்பேட்டையில் ஆரம்பிக்கப்பட்ட வாரச்சந்தையில் கடைகள் வராததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
நடுவீரப்பட்டு அடுத்த பாலுார் அடுத்த சன்னியாசிப்பேட்டையில் கடந்த 5ம் தேதி வாரச்சந்தை ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை சந்தை நடக்கும் என தெரிவித்தனர்.இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் வாரச்சந்தை நடந்ததாகவும்,அதனடிப்படையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
சந்தை ஆரம்ப நாளில் பல கடைகள் வந்தது.ஆனால் கடந்த இரண்டு வாரமாக ஒரு கடை மட்டுமே சந்தையில் உள்ளது.இதனால் கிராமமக்கள் பொருட்கள் வாங்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
ஆகையால் ஒன்றிய அதிகாரிகள் ஆரம்பிக்கப்பட்ட வாரச்சந்தையை சரியான முறையில் நடைமுறைப்படுத்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.