/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின் கேபிள் புதைக்கும் பணி சுப உப்பலவாடி மக்கள் எதிர்பார்ப்பு
/
மின் கேபிள் புதைக்கும் பணி சுப உப்பலவாடி மக்கள் எதிர்பார்ப்பு
மின் கேபிள் புதைக்கும் பணி சுப உப்பலவாடி மக்கள் எதிர்பார்ப்பு
மின் கேபிள் புதைக்கும் பணி சுப உப்பலவாடி மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 22, 2025 11:36 PM
கடலுார்: கடலுார் அருகே சுப உப்பலவாடி கடற்கரை கிராமத்திற்கு மின்சார கேபிள் பதிக்கும் பணியை நிறைவேற்றித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு வீசிய 'தானே' புயலால் கடலுார் மாவட்டம் பெரும் பாதிப்பிற்குள்ளானது. 6,000த்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், துணை மின் நிலையத்திற்கு வரும் உயர்மின் கோபுரங்கள் சாய்ந்தன. மாவட்டத்தின் தலைநகரான கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் 4 நாட்களாக மின்சாரம் இல்லை. தலைமை செயலகத்திற்கு கூட தகவல் தெரிவிக்க மின்சாரம் இல்லாமல் அரசு அதிகாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பேரிடரில் அடிக்கடி பாதிக்கப்படும் மாவட்ட தலைநகரங்களில் மின்சார கேபிள் பதிக்கும் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடலுார், நாகப்பட்டிணம் மாவட்டத்திற்கு 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடலுார் மாநகரத்தை மட்டும் 3 பகுதிகளாக பிரித்து கடந்த 2018ம் ஆண்டு 2 கட்டங்களாக பணிகள் நிறைவேற்றப்பட்டன. கடலோரப் பகுதிகளான தாழங்குடா, தேவனாம்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் கேபிள் புதைக்கப்பட்டன. ஆனால் கடலோரப்பகுதியான கடலுார் ஒன்றியம், சுப உப்பலவாடி கிராமம் இந்த திட்டத்தில் விடுபட்டுவிட்டது. இந்த கிராமத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தற்போது, முதல்கட்ட பணிக்காக நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்திலாவது சுப உப்பலவாடி கிராமத்தை சேர்த்து மின்கேபிள் புதைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.