/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நாடக மேடை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
நாடக மேடை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
நாடக மேடை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
நாடக மேடை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜன 29, 2024 06:21 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே நாடக மேடை அமைக்கும் பணியை பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பரங்கிப்பேட்டை அடுத்த பூவாலை கிராமத்தில், நாடக மேடை அமைக்க, தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 7 லட்சம் ரூபாயை பாண்டியன் எம்.எல்.ஏ., ஒதுக்கி இருந்தார்.
அதற்கான, அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஒன்றிய கவுன்சிலர் வசந்தி சுதந்திரதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் செல்லப்பன் வரவேற்றார். நாடக மேடை கட்டும் பணியை, பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம், ஊராட்சி மன்ற சிவசங்கரி மகேஷ், ஊராட்சி துணை தலைவர் விஜயராஜா, மீனவரணி சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். கிளை கழக செயலாளர் சுதந்திரதாஸ் நன்றி கூறினார்.