ADDED : மே 24, 2026 06:22 AM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: விழுப்புரம் அடுத்த சின்னக்குப்பத்தை சேர்ந்தவர் விபீஷ்ணன், 27; இவர், கடந்த 5 ஆண்டுகளாக, பண்ருட்டி அடுத்த எஸ்.ஏரிப்பாளையத்தில் உள்ள உறவினர் பாலு என்பவர் வீட்டில் தங்கி, பண்ருட்டியில் உள்ள பைனானஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஏப்ரல் 4ம் தேதி, திருச்சியில் நண்பர் திருமணத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற விபீஷ்ணனை காணவில்லை.
பாலு கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
