ADDED : ஜூலை 20, 2025 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : எழுமேடு பச்சை வாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
பண்ருட்டி அடுத்த எழுமேட்டில் உள்ள மன்னார் சுவாமி, பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பரமணியர், பச்சை வாழியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, வள்ளி, தேவசேனா சமேத சுப்பரமணியருக்கு திருக்கல்யாணம், தீமிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
நேற்று மாலை மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் இதயரசு தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.