ADDED : மே 14, 2025 11:39 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பரிபூரணநத்தம் மாரியம்மன்கோவில் சித்திரை தீமிதி திருவிழா நடந்தது.
பரிபூரணநத்தம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன்கோவிலில் கடந்த 9 ஆம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அதனை தொடர்ந்து மூலவர் மாரியம்மனுக்கும், உற்சவ சிலைகளுக்கும் அபிேஷகங்கள், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து இரவு சாமி வீதியுலா வான வேடிக்கையும், நேற்று முன்தினம் பாரதம் படித்தல், காத்தவராயன் கதை, பால்குடம் ஊர்வலம், பக்தர்கள் செடல் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காப்புக்கட்டிக்கொண்ட பக்தர்கள் வீராணம் ஏரிக்கரையிலிருந்து சக்தி கரகத்துடன் கோவிலை வந்தடைந்து பூக்குழியில் இறங்கி தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பரிபூரணநத்தம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.