/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
3 இடங்களில் திருட்டு: வாலிபர் கைது
/
3 இடங்களில் திருட்டு: வாலிபர் கைது
ADDED : பிப் 10, 2024 05:53 AM
கடலுார்: கடலுாரில் தொடர் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், புதுநகர் போலீசார் ஆல்பேட்டை சோதனைச் சாவடி அருகில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடலுார், மஞ்சக்குப்பம் முருகன், 40; என்பது தெரிந்தது. இவர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த ரமேஷ் ராணா என்பவர் மஞ்சக்குப்பத்தில் உள்ள இவரது ஹார்டுவேர்ஸ் கடையின் பூட்டை உடைத்து கடந்த 31ம் தேதி, 3 மின் மோட்டார்களை திருடியது தெரிந்தது.
மேலும், செம்மண்டலம் முகமது அசாருதீனின் ஆட்டோ மொபைல்ஸ் கடையில் 5,000 ரூபாயும், மஞ்சக்குப்பம் சேகர், 48; என்பவரின் எலக்ட்ரிக்கல் கடையில் 10,000 ரூபாய் திருடியதும் தெரிந்தது.
உடன், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்து, 2 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.