நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; உரக்கடையில், ரூ.50 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புவனகிரி அடுத்த திரிஞ்சிக்கொல்லையை சேர்ந்தவர் ரகு, 39; இவரது தம்பி மணிவண்ணன். இருவரும் சேர்ந்து, கருவேப்பிலங்குறிச்சியில் உரக்கடை வைத்துள்ளனர்.
கடந்த 2ம் தேதி வழக்கம்போல், கடையை பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றனர்.
நேற்று முன்தினம் காலை கடையை திறந்து பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.