ADDED : பிப் 22, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் அடுத்த கே.புதுாரி பொறை காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரி சகாலமணி,48. இவர் கடந்த 18ம் தேதி இரவு 9:00 மணிக்கு கோவிலை பூட்டிச் சென்றார்.
மறுநாள் மதியம் 3 மணியளவில் கோவிலை திறக்க வந்தபோது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. கோவிலில் இருந்த அரை கிராம் தங்கம், அரை கிராம் வெள்ளி, கொலுசு, குடம் உள்ளிட்ட 15 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடு போயிருந்தது.
இது குறித்த புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
