ADDED : ஆக 29, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
புவனகிரி: புவனகிரி அருகே மின் பணிக்கு வைத்திருந்த தளவாடப்பொருட்கள் திருட்டு போனது.
கடலூர் மாவட்டத்தில், மின்துறை ஆர்.டி.எஸ்.எஸ்., திட்டத்தின் கீழ், மின் பாதை அமைக்கும் பணியினை, சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க் தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகின்றனர். அதன்படி புவனகிரி அருகே பி.உடையூர் துணை மின் நிலையத்தில் இருந்து, வாண்டையாங்குப்பம் வரை, மின்பாதை அமைக்கும் பணியினை செய்து வந்தனர். இதற்கான பொருட்களை பி.உடையூரில் அடுக்கி வைத்திருந்தனர். இந்நிலையில், அங்கிருந்த மின் கம்பிகள் மற்றும் மின் மாற்றி உள்ளிட்ட தளவாட பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து, அந்த நிறுவனத்தின் மேற்பார்வையாள் வினோத் அளித்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
