/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 6 கோடியில் அமைக்கப்பட்ட தென்பெண்ணை கரை உடைப்பு: அணையை பலப்படுத்த பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை
/
ரூ. 6 கோடியில் அமைக்கப்பட்ட தென்பெண்ணை கரை உடைப்பு: அணையை பலப்படுத்த பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை
ரூ. 6 கோடியில் அமைக்கப்பட்ட தென்பெண்ணை கரை உடைப்பு: அணையை பலப்படுத்த பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை
ரூ. 6 கோடியில் அமைக்கப்பட்ட தென்பெண்ணை கரை உடைப்பு: அணையை பலப்படுத்த பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை
ADDED : டிச 04, 2024 06:22 AM

கடலுார்: கடலுார் தென்பெண்ணையாற்றில் 6 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட வடக்கு பகுதி கரை, இரு இடங்களில் உடைப்பு ஏற்பட்டதே, பல்வேறு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து, மக்கள் கடும் மக்களை கதிகலங்க வைத்தது.
கடலுார் மாநகருக்குள் கெடிலம், தென்பெண்ணையாறு ஆகிய 2 ஆறுகள் ஓடுகின்றன. பல்வேறு மாவட்டங்களில் முக்கிய வடிகாலாக இருந்த ஆறுகள் உள்ளன.
இதனால், மழைக்காலங்களில் கடலுார் மாவட்டத்தில், இரு ஆறுகளின் கரையோர நகர் மற்றும் கிராமங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பாதிப்பை கருத்தில் கொண்டு, இவ்விரு ஆறுகளின் கரைகள் பலப்படுத்த அரசு முடிவு செய்தது. அந்த வகையில் ஏற்கனவே கெடிலம் ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டுவிட்டன. 2வது கட்டமாக தென்பெண்ணையாற்றின் வடக்கு கரை 6 கோடி ரூபாய் மதிப்பில் பலப்படுத்தப்பட்டது. இதனால் பெரிய கங்கணாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு, சுபா உப்பலவாடி ஆகிய பகுதிகளுக்கு வெள்ளநீர் உட்புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடலுாரில், தென்பெண்ணை ஆற்றின் வடக்கு கரை பணி, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் முழுவதுமாக முடிக்கப்பட்டது. இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக அதி கனமழை கொட்டியதால், சாத்தனுார் அணை நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி தண்ணீரை இரவோடு இரவாக முன் அறிவிப்பின்றி, பெண்ணையாற்றில் திறந்துவிடப்பட்டது.
இதனால், கடந்த 2ம் தேதி அதிகாலை, கடலுார் பெண்ணையாற்றில் இரு கரைகளை தொட்டபடி, தண்ணீர் கரைபுரண்டது. ஆற்றில் புதியதாக போடப்பட்ட வடக்கு கரையில் பெரிய கங்கணாங்குப்பம் மற்றும் நாணமேடு ஐயனார் கோவில் அருகே இரு இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இவ்விரு இடங்களிலும் ஏற்பட்ட உடைப்பை பெரிய கங்கணாங்குப்பத்தில் பொதுப்பணித்துறை சார்பில் இரவு பகலாக முயன்று மணல் மூட்டை போட்டு ஓரளவு சரி செய்தனர். ஆனால் வாகன வசதியில்லாத இடத்தில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய முடியவில்லை.
அதனால் வெளியேறிய தண்ணீர் நாணமேடு கிராமத்திற்குள் புகுந்தது. ஏற்கனவே அச்சத்தில் இருந்த மக்கள் தண்ணீர் உடைப்பு எடுத்து வருவதைக்கொண்டு அங்குமிங்கும் பதட்டத்துடன் ஓடி கதிகலங்க வைத்தது.
அப்பகுதியில் விவசாய நிலங்களில் மண் மேடிட்டும் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றதால் அரிப்பு ஏற்பட்டும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையின் குறுக்கே தண்ணீர் சென்றதால் கங்கணாங்குப்பம்- சுபா உப்பலவாடி சாலை மீண்டும் சேதமாகியுள்ளது. ஆற்றின் இரு இடங்களில் ஏற்பட்ட உடைப்பே இவ்வளவு பாதிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.
எனவே, ஆற்றின் கரை உறுதியாக அமைக்காததால் உடைந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, மீண்டும் கரை உடைப்பு ஏற்படாத வகையில் அணையை பலப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.