/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓய்வூதியர்களுக்கு வழங்க நிதி இல்லை
/
ஓய்வூதியர்களுக்கு வழங்க நிதி இல்லை
ADDED : ஜூலை 25, 2025 02:19 AM
கடலுார்:''கடந்த காலத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தர வேண்டிய நிலுவை தொகை படிப்படியாக வழங்கப்படுகிறது,'' என, அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
மணல் குவாரிக்கு எதிரான போராட்ட வழக்கு தொடர்பாக எம்.எல், ஏ.,க்கள், எம்.பி.,க்கள் வழக்கை விசாரிக்கும் கடலுார் சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆஜரானார்.
பின், அவர், நிருபர் களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுதும் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு 3,000 கோடி ரூபாய் வழங்க நிதியில்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அந்த தொகை செலவிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கெல்லாம் முதல்வர் ஸ்டாலின் தீர்வு கண்டு வருகிறார்.
தற்போது, அரசு போக்குவரத்துக் கழகத்தில் 655 பேர் புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர். மேலும் 3,200 பேர் சேர்க்கப்பட உள்ளனர். கடந்த காலத்தில் ஊழியர்களுக்கு தர வேண்டிய நிலுவை தொகை படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.