/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனல் மின் உற்பத்தி முறையை மாற்றுவது உறுதி: என்.எல்.சி., சேர்மன் தகவல்
/
அனல் மின் உற்பத்தி முறையை மாற்றுவது உறுதி: என்.எல்.சி., சேர்மன் தகவல்
அனல் மின் உற்பத்தி முறையை மாற்றுவது உறுதி: என்.எல்.சி., சேர்மன் தகவல்
அனல் மின் உற்பத்தி முறையை மாற்றுவது உறுதி: என்.எல்.சி., சேர்மன் தகவல்
ADDED : மே 17, 2025 11:49 PM

நெய்வேலி: அனல் மின்சாரம் உற்பத்தி செய்யும் முறையை மாற்ற என்.எல்.சி., நிறுவனம் உறுதி பூண்டுள்ளது என அந்நிறுவன சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கூறினார்.
சென்னை ஐ.ஐ.டி., மற்றும் நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் இணைந்து, கார்பன் கவரப்படுதல் முறைகளில் வளி மண்டலத்தில் இருந்து கார்பன்டை ஆக்சைடு வாயுவை பிரித்து அகற்றி சேமித்து வைக்கும் நடைமுறையில் விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி, என்.எல்.சி., மின் துறை இயக்குநர் வெங்கடாசலம், சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசுகையில், 'குறைந்த கார்பன் பயன்பாட்டுக்கான எதிர்காலத்தை நோக்கி முன்னேறி வரும் அதே சமயத்தில், அனல் மின் உற்பத்தி முறையை மாற்றவும் என்.எல்.சி., உறுதி பூண்டுள்ளது. மேம்பட்ட கார்பன் கவரப்படும் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், கார்பன் வெளியேற்றத்தை குறைப்பது மட்டுமின்றி இந்தியாவின் மின்சக்தி தொகுப்பில் வரவிருக்கும் அம்சங்கள் அனல் மின் ஆற்றல் துாய்மையான, நம்பகமான துாணாக இருப்பதையும் உறுதி செய்கிறோம். துாய்மையான அனல்மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நியாயமான, தடையற்ற ஆற்றல் மாற்றத்தை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது' என்றார்.