/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தில்லை கம்பன் கழக சிறப்பு பட்டிமன்றம்
/
தில்லை கம்பன் கழக சிறப்பு பட்டிமன்றம்
ADDED : ஜூலை 22, 2025 07:22 AM

கடலுார் : சிதம்பரத்தில் தில்லை கம்பன் கழகத்தின் காலாண்டு கூட்டத்தை முன்னிட்டு, சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.
தில்லை கம்பன் கழகத் தலைவர், சீனுவாசன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் ராமநாதன், முத்துக்குமரேசன் முன்னிலை வகித்தனர். செயலாளர் வேலாயுதம் வரவேற்றார்.
பொன்னம்பலம், ராகவன் வாழ்த்தி பேசினர். ஆசிரியர் அருள்பிரகாசம் பேசினார். பேராசிரியர் ராமநாதன், 'ராமாயணம் ஓர் எளிய பயணம்' என்ற நுாலை வெளியிட்டார். தொடர்ந்து நடந்த பட்டிமன்ற நிகழ்ச்சியில் பிரகாஷ் நடுவராக பங்கேற்றார்.
'ராமன் வில்லின் மாட்சியே' என்ற அணியில் கயல்விழி சிவகுமார், ராஜதுரை, சிவப்பிரியா ஆகியோரும், 'கம்பன் சொல்லின் ஆட்சியே' என்ற அணியில் சாந்தி, கிருஷ்ணகுமார், கீர்த்தனா ஆகியோரும் பேசினர். நிகழ்ச்சியில் ஆசிரியர் கல்யாணராமன், வர்த்தக பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆசிரியர் புகழேந்தி நன்றி கூறினார்.

