ADDED : ஜூலை 12, 2025 03:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: புதுப்பாளையம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலுார், புதுப்பாளையம் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினசரி காலை சிறப்பு அபிேஷகம், மாலை மகாபாராத சொற்பொழி வும் நடந்தது. 27ம் தேதி, மாலை குத்துவிளக்கு பூஜை நடந்தது.
கடந்த 8ம் தேதி, பகாசூரனுக்கு அன்னமளித்தல், 9ம் தேதி அர்ஜூனன் வில்வளைத்தல், திருக்கல்யாணம், 10ம் தேதி அர்ஜூனன் தபசு, கண்ணபிரான் துாது, சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று மாலை தீமிதி விழா நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது.

